தமிழ்நாட்டில் இன்றிலிருந்து (நவம்பர் 22) வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) வரை பல இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய உள்ளது பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.