பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆந்திர மீனவர்கள் 20 பேரை அந்நாட்டு அரசு இந்திய அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தது.

ஆந்திராவைச் சேர்ந்த 20 மீனவர்கள் சில மாதங்களுக்கு முன் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈட்டுப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகப் பாகிஸ்தான் கடல் பாதுகாப்புப்படையால் குற்றம் சாட்டப்பட்டு அவர்களால் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திட்டமிட்டு பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்பதை வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அரசிடம் உறுதி செய்ததைத் தொடர்ந்து 20 ஆந்திர மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.