ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் இந்திய வம்சாவளி வைராலஜி ஆய்வு நிபுணரான கீதா ராம்ஜி, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா ராம்ஜி, டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (எஸ்.ஏ.எம்.ஆர்.சி) அலுவலகங்களின் மருத்துவ பரிசோதனை பிரிவு முதன்மை ஆய்வாளராகவும், எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சி பிரிவின் பிரிவு இயக்குநராகவும் இருந்தார். இவர் 2012ல் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2018ல் தனித்துவமான பெண் விஞ்ஞானி விருதும் பெற்றுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னதாக லண்டனிலிருந்து திரும்பிய கீதா ராம்ஜிக்கு எந்தவித கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அவர் திடீரென உயிரிழந்தார். இது குறித்து தெ.ஆப்ரிக்க மருத்துவ கவுன்சில் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிளேண்டா கிரே வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராசிரியர் கீதா ராம்ஜி, கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்னைகளால் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார், எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வு நிபுணர் கொரோனாவுக்கு பலி